இல்லத்தரசிகள் & ஹவுஸ்ஓயிஃப்கள்: ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

Published on 6 Feb 2018 . 1 min read



Difference between Homemaker and housewife Difference between Homemaker and housewife

எனது குழந்தைப் பருவ நினைவுகள் முழுவதும், எனது தாய் வீட்டைக் கவனித்து, எனது தந்தையைக் கண்டுபிடித்து அவரைத் தயார் செய்து வேலைக்கு அனுப்பவது போன்றவற்றால் நிறைந்துள்ளது. இந்த வகையான குடும்ப அமைப்பு நான் வளர்கின்ற காலங்களில் சாதாரணமானதாகும். பெரும்பாலான குடும்பங்கள் தந்தை சம்பாதிப்பவராகவும் தாய் குடும்பத்தைக் கவனிப்பராகவும் இருந்தன. இதன் காரணமாக, எனது தந்தை தானாகவே மேலாளர் என்ற பதவியையும் எனது தாய் இல்லத்தரசி என்ற பதவியையும் பெறுகிறார்கள். பொதுவாக, மக்கள் எனது குடும்பத்தைப் பற்றி விசாரிக்கும்போது, நான் எனது தந்தையின் அலுவலகத்தில் அவரது நிலையைக் குறித்து பெருமையாகக் கூறுவேன். எனது தாய் என்று வரும்போது, நான் நெளிந்து கொண்டே சுருங்கிய குரலில் அவள் ஹவுஸ்ஒயிஃபாக இருக்கிறாள் என்று கூறுவேன். இதற்கு நான் அவமானமாக உணர்கிறேன் என்பது பொருளில்லை.

ஹவுஸ் ஒயிஃப்என்ற தொடர் தவறான கருத்துக்கொண்டதாக உள்ளது. அந்த வயதில் நான் புரிந்து கொண்டவரையில், அவள் எனது தந்தையின் மனைவி தானே தவிர வீட்டுடைய மனைவி அல்ல. அதனால் தான் அந்த சொல் என்னைக் குழப்பியது.

நான் வளர்ந்ததும், எனது குழப்பம் கவலையாக மாறியது. எனது தாயால் இந்த முக்கியத்துவம் இன்மையை எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? அவள் இன்னொருவரின் மனைவியாக மட்டுமே இருப்பதை எப்படி ஏற்றுக் கொள்கிறாள்? இது அவளுடைய தனித்தன்மையை கொன்றுவிடாதா? இது அவளை பாதிக்குமா இல்லையா என்பதை அறியாமல், அவளை ஹவுஸ்ஓயிஃப் என்று அழைக்காமல் இருப்பதைத் தவிர்த்து என்னால் வேறு எதையும் செய்ய முடியவில்லை

பின்னர் எனது தொழில்வாழ்க்கையில், குழந்தைகள் இன்னமும் தனது தாய்மார்களை “ஹவுஸ் ஒயிஃப்கள்” என்று குறிப்பிடும்போது, நான் எதுவும் மாறவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். வீட்டு வேலைகளைச் செய்யும் தாய்மார்கள் அனைவரும் சம்பளம் இல்லாமல் பணியாற்றுபவர்களின் பெரும் பகுதியாக உள்ளனர். தொடர்ந்து, தினசரி சமயலறைகளில் வேலை செய்யும், சமைத்து தினசரி நமக்கு புத்தம் புதியதான உணவுகளைப் பரிமாறும் நமது குடும்பத்திலுள்ள பெண்களைப் பற்றி நாம் இரண்டாவது முறையாகச் சிந்திப்பதில்லை. அவர்கள் நமது படுக்கை மற்றும் படுக்கையறைகளை ஒழுங்குபடுத்துகிறார்கள். வீட்டின் இண்டு இடுக்குகளையெல்லாம் சுத்தம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறு “நன்றி” கூட கூறாமல் எப்படி நாம் இருக்கிறோம்.

நான் ஹவுஸ்ஓயிஃப் என்ற சொல்லைப் பற்றி எனது எண்ணங்களை எனது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, அவர்களில் பெரும்பாலானோர் நான் கூறியதை ஒப்புக் கொண்டு, அவர்களும் தங்கள் தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகள், மகள்கள் பற்றிச் சிந்திக்காமல் அவர்களுக்கு நன்றியில்லாதவர்களாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தினார்கள்.

நான் நம்முடைய மனப்பாங்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் வேண்டுமென்று விரும்புகிறேன் அதுவும் நாம் தினசரி வீட்டின் வேலைகளைச் செய்யும் பெண்களை அழைக்கும் சொல்லிலிருந்து தொடங்க வேண்டும்.

அவர்கள் இல்லத்தரசிகள் (Homemakers), ஹவுஸ்ஒயிஃப் இல்லை.


ஹவுஸ்ஒயிப் மற்றும் இல்லத்தரசிகள் என்பதற்கு இடையே அதன் பயன்பாட்டிலும் உணர்விலும் சிறு வேறுபாடு உள்ளது. மாறாக, ஹவுஸ்ஒயிப் என்பதற்கு எந்த பொருளும் இல்லை. அதன் பயன்பாட்டில் மட்டுமில்லாமல் அதன் உருவாக்கத்திலும் தவறு உள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதியின் படி, ஹவுஸ்ஒயிப் என்பவள் ஒரு திருமணமான பெண், அவளின் முதன்மையான வேலை அவளது குடும்பத்தைப் பராமரிப்பது, குடும்ப விவகாரங்களை நிர்வகிப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது ஆகியனவாகும்.

ஹவுஸ்ஒயி்ஃப் என்பதற்கான சமகாலத்திய சொல் அல்லது மிகவும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தொடர் இல்லத்தரசிகள் (Homemakers) என்பதாகும். அந்தச் சொல் கூடுதல் பொறுப்புகளைச் சுமத்துகிறது என்றில்லை. ஹவுஸ்ஓயிஃப்/இல்லத்தரசிகளின் பொறுப்புகள் முடிவற்றவை. ஆனால் அந்தச் சொல் உணர்வைத் தூண்டுகிறது மேலும் வீட்டின் தினசரி வேலைகளை நிர்வகிக்கும் பெண்ணின் மதிப்பையும் ஆளுமையையும் சூழ்ந்ததாக இருக்கிறது.

ஒரு பெண் ஒரு காலிக் கட்டிடத்தை வீடாக மாற்றுவதற்காக தனது வியர்வை, இரத்தம் மற்றும் வாழ்வினைக் கொடுக்கிறாள். அவள் "இனிய இல்லம்” என்று குடும்பத்தினர் அழைக்கும் இடத்தின் உருவாக்குநராக மாறுகிறாள். வீட்டை உருவாக்குதல், குடும்பம், குழந்தைகள் மற்றும் உறவுகளை வளர்த்தல், நாம் நம்மாக இருப்பதற்கான ஒரு இடத்தை உருவாக்குதல் போன்றவற்றைச் செய்கிறாள். அதுவே ஒரு பாராட்டத்தக்க சாதனையாகும்

ஹவுஸ்ஒயிஃப் என்பதை இல்லத்தரசி என்றும் மாற்றிப் பயன்படுத்துவது பற்றிய சமீபத்திய விவாதம் படிபடியாக பரவி வருகின்றனது. ஹவுஸ்ஒயிப் என்பதற்கு பதிலாக இல்லத்தரசிகள் என்று அழைப்பது வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் தொடர்பான நமது மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவருமா? என்பது தர்க்கரீதியான கேள்வியாகத் தெரிகின்றது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் 50-50 உள்ளன!

அடையாளங்கள் கட்டுப்படத்தக்கூடியன. ஆனால் அது நம்மை வரையறுப்பதாக இருந்தால், நாம் ஒரு நபரை அவரின் முழுத்திறமையைச் சூழ்ந்து குறிப்பிடும் தொடரைத் தேர்ந்தெடுப்போம்.

இவ்வாறு தேர்ந்தெடுப்பது மூலம் எனக்கு  புரிந்துகொண்டு வெளியே வர 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட குழப்பத்திலிருந்து வெளிவர பல இளைஞர்களுக்கு உதவும்.


15178990961517899096
SHEROES
SHEROES - lives and stories of women we are and we want to be. Connecting the dots. Moving the needle. Also world's largest community of women, based out of India. Meet us at www.sheroes.in @SHEROESIndia facebook.com/SHEROESIndia


Share the Article :